Wednesday, March 10, 2010

உனக்காக மட்டுமே.....

சில நேர
இடைவெளிகூட
பலமைல்தூர
தொலைவாய் தோன்றும்
உன் சின்ன இதயத்தில்
எனக்கொரு
சிறுபகுதி தருவாயோ...!

உன் கண்பார்வை
கடந்துசெல்ல
ஒரு கணநேரம் மட்டுமே ஆனாலும்
எங்கோ பறந்துபோகிறேன்
எனை அறியாமல் இறந்துபோகிறேன்!

முன்பெல்லாம் ,
சுவாசித்து உயிர்வாழ்ந்தேன்
இப்போதெல்லாம்,
உன்னுடன் வாழ்வதற்காக மட்டுமே
சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்..........!

No comments:

Post a Comment