Saturday, May 7, 2011

பச்சை மரத்தில் ஆணியாய்
பதிந்துபோனது
உன் நினைவுகள்,
பட்டென்று புடுங்கச்சொன்னல் - பாவம்,
உடையதோ என் காதல் சிறகுகள்.!

உனக்கென்ன
கடைசிவரை ஊமையாய் இருந்துவிட்டாய்,
உறவில்லாமல்
என் காதல் உலா வருகிறது
உன்னைத்தேடி..!

உருவம் தந்தாய்
என் காதலுக்கு,
உயிர் தருவதர்க்கென்ன?

யார் யாரோ அழைத்துக்கேட்கிரார்கள்
யாரடா அவளென்று,
உன்னைத்தவிர
யாரிடமும் சொல்லத்தோணவில்லை
நீ தான் என் காதலியென்று..!

Friday, May 6, 2011

அதிகதூரம் பயணித்துவிட்டேன்
திரும்பி பார்க்கையில்
நிறைய கால்தடங்கள்
சில என்னை துறத்தியவை
சில என்னை தொடர்ந்தவை
இருந்தும் தனிமையில் நான் ......!
நேசிக்கிறேன்...!
~~~~~~~~~~~~~~~~~
உன்னைவிட
உன் புகைப்படத்தையே
அதிகமாக நேசிக்கிறேன் - ஆம்,
அதில்மட்டும் தானடி
நீ என்னை மட்டுமே
பார்த்துக்கொண்டிருக்கிறாய்...!
இரவெல்லாம்
யோசித்து எடுத்த முடிவு இது - ஆம்
இனி எல்லா இரவுகளும்
உனக்குதானென்று.....!

Wednesday, May 4, 2011

அன்பே.....!

எதையோ கேட்டு
அழுகின்ற குழந்தைபோல
உனைக் கேட்டு
அழுகின்றேன்.!

எப்போதும் கேட்கும்
பாடலாய்...
உனைப் பார்த்து
ரசிக்கேறேன்.!

எங்கோ ஒலிக்கும்
மணியோசை கேட்டு
தொழுகின்றவன் போல
எனக்கான
உன் குரல் கேட்க்க
ஒற்றையாய் தவமிருக்கிறேன்.!

மரம் இலை அசைவுகளாய்
என் நினைவுகள் அசையுதடி
உனக்கான பாடல் ஒன்று
எப்போதும்
உயிருக்குள் வந்து இசையுதடி.....!

Sunday, May 1, 2011

வா காத்திருப்பேன்


பூக்கள் தோன்ற நேரம் வந்தால்

வண்டு சொல்லும் காதல் ஒன்று!

பூக்கள்போனபின்பு

தொற்றுபோகலம்

அந்த காதலும் கூட அங்கு.

நாட்கள் கூடி

நான் நரை கொண்டு போனாலும்

என்காதல் பூக்குமடி- அங்கும்

உனையே உய்ராய் கொண்டு!!

வாயென்று சொல்லிப்போக

நீ தூரமில்லை என்னை விட்டு!

போயென்று சொல்லிப்போனாள்,

எங்கே போவேன் உன்னைவிட்டு!

காதல்செய்யநீயுமில்லைஎன்னோடு,

வா காத்திருப்பேன்

உயிர் போகும்வரை மண்ணோடு!